ஐபிஎல் 2025 போட்டிக்காகத் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அணிகள் இன்று வெளியிடுள்ளன.
பல ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் உள்ள இப்பட்டியலில் பல இந்திய, வெளிநாட்டு வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை.
சிஎஸ்கே அணியில் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், தீபக் சஹாரும், மும்பை அணியில் இஷான் கிஷன், டிம் டேவிடும், ஆர்சிபி அணியில் கேப்டன் டு பிளெசிஸ், மேக்ஸ்வெல், சிராஜ், கேம்ரூன் கிரீனும், கொல்கத்தா அணியில் ஐபிஎல் 2024 கோப்பையை வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், வெங்கடேஷ் ஐயரும் தக்கவைக்கப்படவில்லை.
அதேபோல், பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டனும், ராஜஸ்தான் அணியில் சஹால், பட்லர், டிரெண்ட் போல்ட், அஸ்வினும், சன்ரைசர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஸ்வர் குமாரும், தில்லி அணியில் கேப்டன் ரிஷப் பந்த், வார்னர், நோர்கியாவும், குஜராத் அணியில் முஹமது ஷமி, டேவிட் மில்லரும், லக்னெள அணியில் கேப்டன் கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ், குயிண்ட்ன் டி காக்க்கும் தக்கவைக்கப்படவில்லை.