டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்
டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் @ipl
விளையாட்டு

ஐபிஎல்: டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்

யோகேஷ் குமார்

ஐபிஎல் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆர்சிபி அணி மயங்க் டாகர், கரன் சர்மா என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. வெளிநாட்டு வீரர்களான அல்ஸாரி ஜோசப் மற்றும் கேம்ரூன் கிரீன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியை முதன்முறையாக வழிநடத்துகிறார் ருதுராஜ் கெயிக்வாட். வெளிநாட்டு வீரர்களான டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, முஸ்தபிஸூர் ரஹ்மான் மற்றும் தீக்‌ஷனா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஏலத்தில் ரூ. 8.40 கோடிக்கு தேர்வு செய்யப்பட்ட சமீர் ரிஸ்விக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன் பதவி குறித்து பேசிய ருதுராஜ், “நான் என் திறமையயை வெளிப்படுத்த விரும்புகிறேன், தோனியின் இடத்தை நிரப்ப நினைக்கவில்லை. ஒரு வாரம் முன்புதான் கேப்டன் பதவி குறித்து எனக்கு தெரியவந்தது. ஆனால் தோனி கடந்த ஐபிஎல் போட்டியின்போதே என்னை தயாராக இருக்கச் சொன்னார்” என்றார்.

சிஎஸ்கே: கெயிக்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஜடெஜா, சமீர் ரிஸ்வி, தோனி, தீபக் சஹார், தீக்‌ஷனா, முஸ்தபிஸூர் ரஹ்மான், தேஷ்பாண்டே

ஆர்சிபி: ஃபாஃப் டு பிளெஸ்ஸி, கோலி, பட்டிதார், மேக்ஸ்வெல், அல்ஸாரி ஜோசப், கேம்ரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரன் சர்மா, மயங்க் டாகர், சிராஜ்