கடந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் (நவம்பர் 24) நாளையும் (நவம்பர் 25) ஜெட்டாவில் நடைபெறுகிறது. மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். பிரபல வீரர்கள் பட்டியலிலிருந்து ஏலம் தொடங்கியது.
கடந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயருக்கு தில்லி, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
முடிவில், ஸ்ரேயஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் எனும் பெருமையையும் பெற்றார் ஸ்ரேயஸ் ஐயர்.
கடந்த ஆண்டு ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு தேர்வானதே ஐபிஎல் வரலாற்றில் அதிகமாக இருந்த நிலையில், இம்முறை அந்த விலையை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளார் ஸ்ரேயஸ் ஐயர்.
ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனை கேகேஆர் அணி தக்கவைக்கவில்லை என்றாலும், தற்போது மெகா ஏலத்தில் மாபெரும் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஸ்ரேயஸ் ஐயர்.
ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு தேர்வான வீரர்கள்
ரூ. 26.75 கோடி - ஷ்ரேயஸ் ஐயர், பஞ்சாப் (2025)
ரூ. 24.75 கோடி - மிட்செல் ஸ்டார்க், கேகேஆர் (2024)
ரூ. 20.50 கோடி - பேட் கம்மின்ஸ், சன்ரைசர்ஸ் (2024)
ரூ. 18.50 கோடி - சாம் கரண், பஞ்சாப் (2023)
ரூ. 17.50 கோடி - கேம்ரூன் கிரீன், மும்பை (2023)