விளையாட்டு

ஏலத்தில் கலக்கிய தமிழக வீரர்கள்!

ஆர். அஸ்வின் 9.75 கோடிக்குத் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யோகேஷ் குமார்

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த முறையும் அதிகமான தமிழக வீரர்கள் தேர்வாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக கேகேஆர் அணியில் வருண் சக்ரவர்த்தி ரூ. 12 கோடிக்கும், குஜராத் அணியில் சாய் சுதர்சன் ரூ. 8.5 கோடிக்கும், ஷாருக் கான் ரூ. 4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் மெகா ஏலத்தில் 8 தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆச்சர்யப்படும் விதத்தில் இவர்களில் நால்வரை சிஎஸ்கே அணியே தேர்வு செய்துள்ளது.

ஆர். அஸ்வின் 9.75 கோடிக்குத் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், யார்க்கர் கிங் என அழைக்கப்படும் நடராஜன், தில்லி அணியால் ரூ. 10.75 கோடிக்குத் தேர்வானது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி வாஷிங்டன் சுந்தர் ரூ. 3.20 கோடிக்கு குஜராத் அணியிலும், விஜய் சங்கர் ரூ. 1.20 கோடிக்கு சிஎஸ்கே அணியிலும், சாய் கிஷோர் ரூ. 2 கோடிக்கு குஜராத் அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அன்கேப்டு வீரர்களில் குர்ஜப்நீத் சிங் ரூ. 2.20 கோடிக்கும் ஆண்ட்ரே சித்தார்த் ரூ. 30 லட்சத்துக்கும் சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

மணிமாறன் சித்தார்த் ரூ. 75 லட்சத்துக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.