ஐபிஎல் 2024-கான ஏலம் துபாயில் இன்று தொடங்கியது. 333 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் முதல் வீரராக மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த ரோவ்மன் பவல் ரூ. 7.40 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிய பவல், ஏலத்திற்கு முன்பு அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். தற்போது இந்த ஏலத்தில் இவரை தேர்வு செய்ய கேகேஆர் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் கடும் போட்டி நிலவியது. முடிவாக ராஜஸ்தான் அணி அவரை ரூ. 7.40 கோடிக்கு தேர்வு செய்தது.
மேற்கிந்தியத் தீவுகள் டி20 அணியின் கேப்டனான பவல், ஐபிஎல் 2022-ல் 14 ஆட்டங்களில் விளையாடி 250 ரன்கள் குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றார் ரோவ்மன் பவல்.