ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னெள அணிக்காக ரூ. 27 கோடிக்குத் தேர்வாகி, ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்குத் தேர்வான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார் ரிஷப் பந்த்.
அவருக்கு அடுத்ததாக ஸ்ரேயஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டு, அதிக தொகைக்குத் தேர்வான வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தார்.
இதற்கு முன்பு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு தேர்வானவர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க். கடந்த வருடம் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கு கேகேஆர் அணி தேர்வு செய்தது. அவர் இப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் 2025-ல் அதிக சம்பளம் பெறும் வீரர்களின் விவரங்களை காணலாம்.
ரிஷப் பந்த் (லக்னௌ) - ரூ. 27 கோடி
ஸ்ரேயஸ் ஐயர் (பஞ்சாப்) - ரூ. 26.75 கோடி
வெங்கடேஷ் ஐயர் (கேகேஆர்) - ரூ. 23.75 கோடி
ஹெயின்ரிக் கிளாசென் (சன்ரைசர்ஸ்) - ரூ. 23 கோடி
நிகோலஸ் பூரன் (லக்னெள), விராட் கோலி (ஆர்சிபி) - ரூ. 21 கோடி
யுஸ்வேந்திர சஹால் (பஞ்சாப்)- ரூ. 18 கோடி
அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) - ரூ. 18 கோடி
ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே) - ரூ. 18 கோடி
ரவீந்திர ஜடேஜா (சிஎஸ்கே) - ரூ. 18 கோடி
பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ்) - ரூ. 18 கோடி
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்) - ரூ. 18 கோடி
யஷஸ்வி ஜெயிஸ்வால் (ராஜஸ்தான்) - ரூ. 18 கோடி
ரஷித் கான் (குஜராத்) - ரூ. 18 கோடி
ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) - ரூ. 18 கோடி