ஐபிஎல் ஏலம் AP Photo
விளையாட்டு

ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்!

Madhavan

ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏலம் துபாயில் டிசம்பர் 19-ல் நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. இதில் 214 இந்திய மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுள் 116 வீரர்கள் ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள். 215 பேர் புதுமுகங்கள்.

30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 வீரர்களை 10 அணிகளும் தேர்வு செய்யவுள்ளன. 23 வீரர்களுக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலையாகவும் 13 வீரர்களுக்கு ரூ. 1.5 கோடி அடிப்படை விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 11 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

மொத்தப் பட்டியலையும் காண இங்கே கிளிக் செய்யவும்.