@BLACKCAPS
விளையாட்டு

முதல் டெஸ்ட்: நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில் தடுமாறும் இந்திய அணி!

விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

யோகேஷ் குமார்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் உணவு இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதல் திணறியது இந்திய அணி. குறிப்பாக வில் ஒ ரோர்க் அசத்தலாக பந்துவீசி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார்.

ரோஹித் சர்மா 2 ரன்களில் வெளியேற விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

இதன் பிறகு ஜெயிஸ்வால் 13 பந்துகளில் வெளியேறினார். 63 பந்துகள் எதிர்கொண்ட ஜெயிஸ்வாலுடன் எவரும் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை.

இதன் பிறகு ராகுல் மற்றும் ஜடேஜாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். நிதானமாக விளையாடிய ரிஷப் பந்த் 41 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார்.

2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி தரப்பில் வில் ஒ ரோர்க் 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.