2024-25 உள்ளூர் பருவத்துக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. செப்டம்பர் முதல் பிப்ரவரி 2025 வரை நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களில் சென்னைக்கு ஒரு டெஸ்டும் ஒரு டி20 ஆட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா - வங்கதேசம் அணிகள் சென்னையில் டெஸ்ட் தொடருக்கான முதல் டெஸ்டை செப்டம்பர் 19 முதல் 23 வரை சென்னையில் விளையாடவுள்ளன. இதையடுத்து ஜனவரியில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் ஜனவரி 22 அன்று நடைபெறவுள்ளது.
2024-25 பருவத்தில் இந்தியாவில் வங்கதேச அணி 2 டெஸ்டுகளும் 3 டி20 ஆட்டங்களும் விளையாடவுள்ளது. அக்டோபர், நவம்பரில் நியூசிலாந்து அணி, இந்தியாவில் 3 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
2024-25 அட்டவணை
இந்தியா - வங்கதேசம்
முதல் டெஸ்ட், செப்டம்பர் 19 - சென்னை
2-வது டெஸ்ட், செப்டம்பர் 27 கான்பூர்
முதல் டி20, அக்டோபர் 6 தரம்சாலா
2-வது டி20, அக்டோபர் 9, தில்லி
3-வது டி20, அக்டோபர் 12, ஹைதராபாத்,
இந்தியா - நியூசிலாந்து
முதல் டெஸ்ட், அக்டோபர் 16, பெங்களூரு
2-வது டெஸ்ட், அக்டோபர் 24, புனே
3-வது டெஸ்ட், நவம்பர் 1, மும்பை
இந்தியா - இங்கிலாந்து
முதல் டி20, ஜனவரி 22, சென்னை
2-வது டி20, ஜனவரி 25, கொல்கத்தா
3-வது டி20, ஜனவரி 28, ராஜ்கோட்
4-வது டி20, ஜனவரி 31, புனே
5-வது டி20, பிப்ரவரி 2, மும்பை
முதல் ஒருநாள், பிப்ரவரி 6, நாக்பூர்
2-வது ஒருநாள், பிப்ரவரி 9, கட்டாக்
3-வது ஒருநாள், பிப்ரவரி 12, அஹமதாபாத்