இலங்கை அணி அறிவிப்பு! ANI
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

முதல் டி20 ஆட்டம் ஜூலை 27 அன்று நடைபெறவுள்ளது.

யோகேஷ் குமார்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி அசலங்கா தலைமையில் களமிறங்கவுள்ளது.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.

டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12 அன்று இலங்கை அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகினார். இந்நிலையில் அசலங்கா தலைமையில் களமிறங்குகிறது இலங்கை அணி.

கடைசியாக 2022-ல் டி20 ஆட்டத்தில் பங்கேற்ற தினேஷ் சண்டிமலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்ற பெரும்பாலானோர் இத்தொடரில் விளையாடவுள்ளனர்.

டி20 தொடருக்கான இலங்கை அணி

அசலங்கா (கேப்டன்), நிசங்கா, குசால் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமல், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, தீக்‌ஷனா, விக்ரமசிங்கே, பதிரனா, நுவான் துஷாரா, வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா, பினுரோ ஃபெர்னாண்டோ.