ANI
விளையாட்டு

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஷுப்மன் கில் துணை கேப்டன்! | Asia Cup | Shubman Gill

அணியில் இடம் கிடைக்காத பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் ப்ராக், ஜெயிஸ்வால் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷுப்மன் கில், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 அணியில் ஷுப்மன் கில் மீண்டும் இடம்பெற்று அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தவிர அணியில் வேறு பெரிய மாற்றம் இல்லை. ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவதால் இந்திய லெவனில் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசியக் கோப்பை அணியில் பும்ராவும் இடம்பெற்றுள்ளார்.

அணியில் இடம் கிடைக்காத பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் ப்ராக், ஜெயிஸ்வால் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியலிலும் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை.

பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா என்கிற கேள்விக்குப் பதிலளிக்க தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் மறுத்துவிட்டார்.

இம்முறை டி20 ஆட்டங்களாக நடைபெறும் ஆசியக் கோப்பை 2025 போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.