டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி! 
விளையாட்டு

2-1: டி20 தொடரை வென்ற இந்தியா | India vs Australia |

163 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது...

கிழக்கு நியூஸ்

5-வது டி20 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. தொடர் நாயகன் விருது, 163 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும் அஸ்திரேலியாவும் விளையாடின. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த நவம்பர் 6 அன்று நடந்த நான்காவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன்மூலம், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம், பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். இரு வீரர்களும் விக்கெட் இழப்பின்றி 4.5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழை நின்ற பிறகு ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடுமையாக மழை பெய்த நிலையில், இரு அணிகளும் கலந்து பேசி ஆட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அதன்மூலம் 2-க்கு 1 என்ற புள்ளிக் கணக்கின்படி தொடரை இந்தியா வென்றது. இதையடுத்து 163 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்குத் தொடரின் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது.

India secured a 2-1 series victory over Australia in their T20 International series after the final match at the Gabba was abandoned due to rain.