ANI
விளையாட்டு

ஐசிசி கோப்பை: முடிவுக்கு வந்த காத்திருப்பு!

2013-ல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோது அடுத்த ஐசிசி கோப்பையை வெல்ல 11 வருடங்களும்...

கிழக்கு நியூஸ்

2011 உலகக் கோப்பையை தோனி வென்றபோது அடுத்த உலகக் கோப்பையை வெல்ல 13 வருடங்களும் 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோது அடுத்த ஐசிசி கோப்பையை வெல்ல 11 வருடங்களும் காத்திருக்க வேண்டும் என எந்தவொரு இந்திய ரசிகரும் எண்ணியிருக்க மாட்டார். அதிலும் பல போட்டிகளில் இறுதிச் சுற்று வரை வந்தும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாத நிலையே ஏற்பட்டது.

2013-க்குப் பிறகு 2014 டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாலும் இலங்கையிடம் தோற்றது.

2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்றது கோலி தலைமையிலான இந்திய அணி.

2021, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று ஆட்டங்களில் இந்திய அணி விளையாடினாலும் இரண்டிலும் முறையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2021-ல் கோலி கேப்டனாகவும் 2023-ல் ரோஹித் சர்மா கேப்டனாகவும் இருந்தார்கள்.

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது பல கோடி ரசிகர்களை ஏமாற்றியது.

ஆனால், இந்த டி20 உலகக் கோப்பை இந்திய ரசிகர்களிடம் புன்னகையை மீண்டும் வரவழைத்துள்ளது. 13 வருடங்களுக்கு உலகக் கோப்பையை மீண்டும் வென்றுள்ளது. கபில் தேவ், தோனிக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.