விளையாட்டு

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 6-வது தங்கம்

தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலுவைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் பிரவீன் குமார்

ராம் அப்பண்ணசாமி

பாராலிம்பிக்ஸ் டி64 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான டி64 உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் கலந்துகொண்டார். இதில் 2.08 மீ. உயரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார் பிரவீன் குமார்.

இதனால் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலுவைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பிரவீன் குமார்.

ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரவீன் குமார்.

இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.