தில்லிக்கு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு! ani
விளையாட்டு

தில்லிக்கு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு!

இன்று மாலை 5 மணி முதல் மும்பையின் மரைன் டிரைவ் மற்றும் வான்கடேவில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்பிய நிலையில் தில்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையையும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையையும் வென்ற இந்திய அணி மே.இ. தீவுகளில் இருந்து நேற்று புறப்பட்டது.

தனி விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி இன்று அதிகாலை தில்லி வந்தடைந்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் நடனம் ஆடியும், கேக் வெட்டியும் வெற்றியைக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியினர் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். மேலும், இன்று மாலை 5 மணி முதல் மும்பையின் மரைன் டிரைவ் மற்றும் வான்கடேவில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு ரசிகர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா தனது எக்ஸ் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.