அபிஷேக் சர்மா ANI
விளையாட்டு

கில் பேட்டில் விளையாடி சதம் அடித்தேன்: அபிஷேக் சர்மா

“ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தால் இங்கு அழுத்தமின்றி விளையாட முடிகிறது”.

யோகேஷ் குமார்

எப்போதெல்லாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதெல்லாம் கில்லின் பேட்டில் விளையாடுவேன் என்று அபிஷேக் சர்மா பேசியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 46-வது பந்தில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை எட்டினார். சதமடித்த இவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் அடித்த 3-வது வீரர் எனும் சாதனையையும் அபிஷேக் சர்மா படைத்தார். முன்னதாக, முதல் டி20 ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஆட்டன் முடிந்தப்பின் பேசிய அவர்,

“பெரும்பாலும் முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்று தான் விளையாடுவேன். அதற்காக நிறைய பயிற்சியும் செய்வேன். ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தால் இங்கு அழுத்தமின்றி விளையாட முடிகிறது. ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்தால், அன்று என்னுடைய நாளாக உணர்வேன். கில்லுடன் சிறுவயதில் இருந்தே விளையாடி வருகிறேன். இந்திய அணிக்கு தேர்வான பிறகு எனக்கு முதலில் அழைத்தவர் அவர் தான். அவர் பேட்டில் விளையாடி தான் சதம் அடித்தேன். எப்போதெல்லாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதெல்லாம் கில்லின் பேட்டில் விளையாடுவேன். ஐபிஎல் போட்டிகளிலும் இவ்வாறு செய்திருக்கிறேன்” என்றார்.