ANI
விளையாட்டு

ஐபிஎல் தவிர வேறு லீக் போட்டிகளில் விளையாட மாட்டேன்: டிராவிஸ் ஹெட்

"டெஸ்டில் என்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் செலுத்த விரும்புகிறேன்."

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் தவிர மற்ற லீக் போட்டிகளில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இரு டெஸ்டுகள் கொண்ட தொடர் மற்றும் இரு ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்டராக டிராவிஸ் ஹெட் களமிறங்கவுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கு முன்பு டி20 லீக் போட்டிகள் குறித்து பேசிய அவர், ஐபிஎல் தவிர மற்ற டி20 லீக் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

"ஐபிஎல் தவிர மற்ற லீக் போட்டிகள் எதிலும் விளையாட மாட்டேன். பிக் பாஷில் நான் விளையாடும் அணி தான் மூன்றாவது அணி. எனவே, தற்போதைய நிலையில் வேறு எந்தப் போட்டியிலும் நான் விளையாடப்போவதில்லை. ஓர் அணியாக எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் மிக முக்கியமானது. எனவே, டெஸ்டில் என்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் செலுத்த விரும்புகிறேன்.

இந்த வருடம் பிக் பாஷ் போட்டியில் விளையாட முடியவில்லை என்ற ஏமாற்றம் உள்ளது. பிக் பாஷ் போட்டியில் விளையாட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், அடுத்த இரு வாரங்கள் நான் சிறந்த முறையில் விளையாடும் என்கிற நிலைக்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அடுத்த ஆண்டு பிக் பாஷ் போட்டியில் மீண்டும் விளையாடுவேன்" என்றார் ஹெட்.

எம்எல்சி, தி ஹண்ட்ரட் போட்டிகளில் விளையாடாதபோது, கூடுதல் ஓய்வு கிடைப்பதாக டிராவிஸ் ஹெட் கருதுகிறார்.