ஐபிஎல் ஏலத்தில் தேர்வான புதிய வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அறிவுரை வழங்கியுள்ளார்.
ஏலத்தில் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், வில் ஜேக்ஸ், மிட்செல் சாண்ட்னர் போன்ற பிரபல வீரர்களையும் நமன் திர், ராபின் மின்ஸ், ராஜ் பவா, அர்ஜூன் டெண்டுலகர் போன்ற இளம் வீரர்களையும் தேர்வு செய்துள்ளது மும்பை அணி.
இந்நிலையில் ஏலத்தில் தேர்வான புதிய வீரர்களுக்கு அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஹார்திக் பாண்டியா பேசியதாவது
“மும்பை அணியில் தேர்வாகியிருக்கிறீர்கள் என்றால், உங்களிடம் திறமை இருக்கிறது. அதனை அணி நிர்வாகமும் பார்த்திருக்கும். நான் உள்பட பும்ரா, திலக் வர்மா, கிருனாள் பாண்டியா போன்றவர்களை மும்பை அணி கண்டுப்பிடித்தது. நாங்கள் அனைவரும் இந்திய அணியிலும் விளையாடினோம்.
கடுமையாக உழைப்பதே உங்களின் வேலை. அப்படி நீங்கள் செய்தால் உங்களை சிறப்பான வீரராக மும்பை அணி மாற்றும். மற்ற அணிகளில் இருந்து புதிதாக நிறைய வீரர்கள் மும்பை அணியில் இணையவுள்ளனர். இங்கு இருக்கும் அனைவரும் இந்த இடத்தை தங்களின் வீடு போல உணர்வார்கள்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.