ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை அட்டவணை: ஜுன் 9-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்

கிழக்கு நியூஸ்

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன. ஆன்டிகுவா & பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் & கிரீனடைன்ஸ், டிரினிடாட் & டொபாகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.

9 இடங்களில் 55 ஆட்டங்களாக நடைபெறும் உலகக் கோப்பை ஜுன் 1-ல் தொடங்கி ஜுன் 29-ல் முடிவடைகிறது. பார்படோஸில் இறுதிச் சுற்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள 20 அணிகளின் விவரம்

போட்டியை நடத்தும் நாடுகள் - மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா

2022-ன் முதல் 8 அணிகள் - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை

டி20 தரவரிசையில் அடுத்த இரு அணிகள் - ஆப்கானிஸ்தான், வங்கதேசம்

தகுதிச் சுற்றில் தேர்வானவை

ஆப்பிரிக்கா: நமீபியா, உகாண்டா

அமெரிக்கா: கனடா

ஆசியா: நேபாளம், ஓமன்

கிழக்கு ஆசிய பசிபிக்: பப்புவா நியூ கினியா

ஐரோப்பா: அயர்லாந்து, ஸ்காட்லாந்து

இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு (சூப்பர் 8) தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் மீண்டும் 8 அணிகள் இரு பிரிவுகளாக விளையாடும். இதில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

2024 டி20 உலகக் கோப்பை குரூப் பிரிவுகள்

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூப் சி: நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா

குரூப் டி: தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்

2024 டி20 உலகக் கோப்பை அட்டவணை

சனி, 1 ஜுன் 2024 - அமெரிக்கா v கனடா, டல்லாஸ்

ஞாயிறு, 2 ஜுன் 2024 - மே.இ. தீவுகள் v பப்புவா நியூ கினியா, கயானா

ஞாயிறு, 2 ஜுன் 2024 - நமீபியா v ஓமன், பார்படோஸ்

திங்கள், 3 ஜுன் 2024 - இலங்கை v தென்னாப்பிரிக்கா, நியூ யார்க்

திங்கள், 3 ஜுன் 2024 - ஆப்கானிஸ்தான் v உகாண்டா, கயானா

செவ்வாய், 4 ஜுன் 2024 - இங்கிலாந்து v ஸ்காட்லாந்து, பார்படோஸ்

செவ்வாய், 4 ஜுன் 2024 - நெதர்லாந்து v நேபாளம், டல்லாஸ்

புதன், 5 ஜுன் 2024 - இந்தியா v அயர்லாந்து, நியூ யார்க்

புதன், 5 ஜுன் 2024 - பப்புவா நியூ கினியா v உகாண்டா, கயானா

புதன், 5 ஜுன் 2024 - ஆஸ்திரேலியா v ஓமன், பார்படோஸ்

வியாழன், 6 ஜுன் 2024 - அமெரிக்கா v பாகிஸ்தான், டல்லாஸ்

வியாழன், 6 ஜுன் 2024 - நமீபியா v ஸ்காட்லாந்து, பார்படோஸ்

வெள்ளி, 7 ஜுன் 2024 - கனடா v அயர்லாந்து, நியூ யார்க்

வெள்ளி, 7 ஜுன் 2024 - நியூசிலாந்து v ஆப்கானிஸ்தான், கயானா

வெள்ளி, 7 ஜுன் 2024 - இலங்கை v வங்கதேசம், டல்லாஸ்

சனி, 8 ஜுன் 2024 - நெதர்லாந்து v தென்னாப்பிரிக்கா, நியூ யார்க்

சனி, 8 ஜுன் 2024 - ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, பார்படோஸ்

சனி, 8 ஜுன் 2024 - மே.இ. தீவுகள் v உகாண்டா, கயானா

ஞாயிறு, 9 ஜுன் 2024 - இந்தியா v பாகிஸ்தான், நியூ யார்க்

ஞாயிறு, 9 ஜுன் 2024 - ஓமன் v ஸ்காட்லாந்து, ஆன்டிகுவா

திங்கள், 10 ஜுன் 2024 - தென்னாப்பிரிக்கா v வங்கதேசம், நியூ யார்க்

செவ்வாய், 11 ஜுன் 2024 - பாகிஸ்தான் v கனடா, நியூ யார்க்

செவ்வாய், 11 ஜுன் 2024 - இலங்கை v நேபாளம், ஃபுளோரிடா

செவ்வாய், 11 ஜுன் 2024 - ஆஸ்திரேலியா v நமீபியா, ஆன்டிகுவா

புதன், 12 ஜுன் 2024 - அமெரிக்கா v இந்தியா, நியூ யார்க்

புதன், 12 ஜுன் 2024 - மே.இ. தீவுகள் v நியூசிலாந்து, டிரினிடாட்

வியாழன், 13 ஜுன் 2024 - இங்கிலாந்து v ஓமன், ஆன்டிகுவா

வியாழன், 13 ஜுன் 2024 - வங்கதேசம் v நெதர்லாந்து, செயிண்ட் வின்சென்ட்

வியாழன், 13 ஜுன் 2024 - ஆப்கானிஸ்தான் v பப்புவா நியூ கினியா, டிரினிடாட்

வெள்ளி, 14 ஜுன் 2024 - அமெரிக்கா v அயர்லாந்து, ஃபுளோரிடா

வெள்ளி, 14 ஜுன் 2024 - தென்னாப்பிரிக்கா v நேபாளம், செயிண்ட் வின்சென்ட்

வெள்ளி, 14 ஜுன் 2024 - நியூசிலாந்து v உகாண்டா, டிரினிடாட்

சனி, 15 ஜுன் 2024 - இந்தியா v கனடா, ஃபுளோரிடா

சனி, 15 ஜுன் 2024 - நமீபியா v இங்கிலாந்து, ஆன்டிகுவா

சனி, 15 ஜுன் 2024 - ஆஸ்திரேலியா v ஸ்காட்லாந்து, செயிண்ட் லூசியா

ஞாயிறு, 16 ஜுன் 2024 - பாகிஸ்தான் v அயர்லாந்து, ஃபுளோரிடா

ஞாயிறு, 16 ஜுன் 2024 - வங்கதேசம் v நேபாளம், செயிண்ட் வின்சென்ட்

ஞாயிறு, 16 ஜுன் 2024 - இலங்கை v நெதர்லாந்து, செயிண்ட் லூசியா

திங்கள், 17 ஜுன் 2024 - நியூசிலாந்து v பப்புவா நியூ கினியா, டிரினிடாட்

திங்கள், 17 ஜுன் 2024 - மே.இ. தீவுகள் v ஆப்கானிஸ்தான், செயிண்ட் லூசியா

சூப்பர் 8 - ஜுன் 19 முதல் 24 வரை

அரையிறுதி - ஜுன் 26, ஜுன் 27

இறுதிச் சுற்று - ஜுன் 29