ANI
விளையாட்டு

கங்குலி முதல் ரஹானே வரை...: கேகேஆர் கேப்டன்கள் பட்டியல்!

கௌதம் கம்பீர் 122 ஆட்டங்களில் கொல்கத்தாவை வழிநடத்தியுள்ளார்.

கிழக்கு நியூஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி அறிமுகமானதிலிருந்து வெற்றிகரமான அணிகளுள் ஒன்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளது. இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. ஐபிஎல் 2025 போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகிறது.

சௌரவ் கங்குலி தொடங்கி இதுவரை 7 பேர் கொல்கத்தாவின் கேப்டன்களாக செயல்பட்டுள்ளார்கள். அஜிங்க்யா ரஹானே அந்த அணியின் 8-வது கேப்டன்.

கொல்கத்தா கேப்டன்கள் பட்டியல்

சௌரவ் கங்குலி (2008-10)

  • ஆட்டங்கள் - 27

  • வெற்றி - 13

  • தோல்வி - 14

பிரெண்டன் மெக்கல்லம் (2009-09)

  • ஆட்டங்கள் - 13

  • வெற்றி - 3

  • தோல்வி - 9

  • சமன் - 1

கௌதம் கம்பீர் (2011-17)

  • ஆட்டங்கள் - 122

  • வெற்றி - 69

  • தோல்வி - 51

  • சமன் - 1

  • முடிவில்லை - 1

ஜேக் காலிஸ் (2011-11)

  • ஆட்டங்கள் - 2

  • வெற்றி - 1

  • தோல்வி - 1

தினேஷ் கார்த்திக் (2018-20)

  • ஆட்டங்கள் - 37

  • வெற்றி - 19

  • தோல்வி - 17

  • சமன் - 1

இயான் மார்கன் (2020-21)

  • ஆட்டங்கள் - 24

  • வெற்றி - 11

  • தோல்வி - 12

  • சமன் - 1

ஷ்ரேயஸ் ஐயர் (2022-24)

  • ஆட்டங்கள் - 29

  • வெற்றி - 17

  • தோல்வி - 11

  • முடிவில்லை - 1

நிதிஷ் ராணா (2023-23)

  • ஆட்டங்கள் - 14

  • வெற்றி - 6

  • தோல்வி - 8