ருதுராஜ் @icc
விளையாட்டு

காயம் காரணமாக ருதுராஜ் விலகல் : இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன்

யோகேஷ் குமார்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடக்கவிருக்கும் டெஸ்டில் காயம் காரணமாக ருதுராஜ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிச. 26 அன்று தொடங்குகிறது. இத்தொடரில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி விலகியிருந்த நிலையில், ருதுராஜும் அணியில் இருந்து விலகியுள்ளார். டெஸ்ட் தொடரிலிருந்து இவர்கள் விலகியிருப்பது, இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடினார். அவ்வப்போது இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம் பிடித்துள்ள இவர், இந்திய அணிக்காக இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாடியதில்லை.

தெ.ஆ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், கேஎஸ் பரத், யஷஸ்வி ஜெயிஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), முஹமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, ஷார்துல் தாக்குர்