ANI
விளையாட்டு

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அட்டவணை வெளியீடு

மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல் 5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30, மே 12 ஆகிய நாள்களில் சிஎஸ்கே சேப்பாக்கத்தில் விளையாடுகிறது.

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் 2025 போட்டிக்கான முழு அட்டவணை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை மார்ச் 23 அன்று சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

லீக் சுற்றின் கடைசி நாளன்று சிஎஸ்கே அணி குஜராத் டைடன்ஸ் அணியை அஹமதாபாதில் எதிர்கொள்கிறது. இம்முறை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருமுறை மோதுகின்றன.

மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல் 5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30, மே 12 ஆகிய நாள்களில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டங்களின் முழு அட்டவணை

  1. மார்ச் 23 - சிஎஸ்கே vs மும்பை, சென்னை

  2. மார்ச் 28 - சிஎஸ்கே vs ஆர்சிபி, சென்னை

  3. மார்ச் 30 - ராஜஸ்தான் vs சிஎஸ்கே, குவஹாத்தி

  4. ஏப்ரல் 5 - சிஎஸ்கே vs தில்லி, சென்னை (பிற்பகல் ஆட்டம்)

  5. ஏப்ரல் 8 - பஞ்சாப் vs சிஎஸ்கே, முல்லாபூர்

  6. ஏப்ரல் 11 - சிஎஸ்கே vs கேகேஆர், சென்னை

  7. ஏப்ரல் 14 - லக்னௌ vs சிஎஸ்கே, லக்னௌ

  8. ஏப்ரல் 20 - மும்பை vs சிஎஸ்கே, மும்பை

  9. ஏப்ரல் 25 - சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ், சென்னை

  10. ஏப்ரல் 30 - சிஎஸ்கே vs பஞ்சாப், சென்னை

  11. மே 3 - ஆர்சிபி vs சிஎஸ்கே, பெங்களூரு

  12. மே 7 - கேகேஆர் vs சிஎஸ்கே, கொல்கத்தா

  13. மே 12 - சிஎஸ்கே vs ராஜஸ்தான், சென்னை

  14. மே 18 - குஜராத் vs சிஎஸ்கே, அஹமதாபாத் (பிற்பகல் ஆட்டம்)

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டங்கள்

  1. மார்ச் 23 - சிஎஸ்கே vs மும்பை

  2. மார்ச் 28 - சிஎஸ்கே vs ஆர்சிபி

  3. ஏப்ரல் 5 - சிஎஸ்கே vs தில்லி

  4. ஏப்ரல் 11 - சிஎஸ்கே vs கேகேஆர்

  5. ஏப்ரல் 25 - சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ்

  6. ஏப்ரல் 30 - சிஎஸ்கே vs பஞ்சாப்

  7. மே 12 - சிஎஸ்கே vs ராஜஸ்தான்