பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு ஒன்றுமே தெரியாது: சோயிப் அக்தர் கடும் விம்ர்சனம் 
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு ஒன்றுமே தெரியாது: சோயிப் அக்தர் கடும் விமர்சனம் | Pakistan |

10 ஓவர்கள் கூட நிலைத்து நின்று ஆடத் தெரியாதவர்களை நட்சத்திர வீரர்களாக மாற்றியதே தோல்விக்குக் காரணம்...

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையில் நேற்று (பிப். 15) நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. முதலில் ஆடிய இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி மற்றும் சூர்யகுமார் யாதவ், சிவம் துபே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 175 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சோயிப் அக்தர் விமர்சனம்

பாகிஸ்தானின் இந்தத் தோல்வி குறித்து ஏபிபி நியூஸ் நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சருமான மொஷின் நக்வியைக் கடுமையாக விமர்சித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: “கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆக்கினால், அந்த அணி எப்படி உருப்படும்? மொஷின் நக்விக்கு கிரிக்கெட் நிர்வாகம் குறித்து எந்த அறிவும் இல்லை. அவர் தகுதியற்றவர்.

பாபர் ஆஸம் மீது அதிருப்தி

ஒரு போட்டியில் கூட வெற்றியைத் கொடுக்க முடியாத வீரரை சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள். 10 ஓவர்கள் கூட நிலைத்து நின்று ஆடத் தெரியாதவர்களை நட்சத்திர வீரர்களாக மாற்றியதே தோல்விக்குக் காரணம். 125 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்கள். இது நவீன கிரிக்கெட்டுக்கு உதவாது. நெருக்கடியான சூழல்களைக் கையாளும் திறன் இந்த வீரர்களிடம் இல்லை. கடந்த 15-20 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எந்த முதலீடும் செய்யப்படவில்லை.

ஒரு காலத்தில் நாங்கள் மைதானத்தில் இந்தியாவிற்குச் சமமாகப் போராடினோம். ஆனால் இன்று இந்தியாவைத் தோற்கடிப்பது என்பது கனவு போல் ஆகிவிட்டது. இந்தியா கிரிக்கெட்டில் பல மடங்கு முன்னேறிவிட்டது, நாம் மிக மோசமான நிலையில் இருக்கிறோம்.“ என்றார்.

T20 World Cup: Following India's 61-run dominating win over Pakistan in the T20 World Cup 2026 clash, former Pakistan pacer Shoaib Akhtar said "One guy who does not know anything has become the Pakistan Cricket Board's chairman (Mohsin Naqvi).