விளையாட்டு

'கேப்டன் கூல்' டிரேட்மார்கை பெற்றார் தோனி!

4 கட்ட விசாரணைக்குப் பிறகு தோனியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிழக்கு நியூஸ்

கேப்டன் கூல் என்பதற்கான டிரேட்மார்க் அங்கீகாரத்தைப் பெற்றார் எம்எஸ் தோனி.

இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவரான எம்எஸ் தோனி, கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்படுவார். இவருடைய தலைமைப் பண்பு, இக்கட்டான சூழல்களில் பதற்றம் கொள்ளாமல் நிதானமாக சரியான முடிவை எடுப்பது உள்ளிட்ட குணங்களால் இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. அண்மையில் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டார்.

இவர் கேப்டன் கூல் என்ற பெயருக்கு டிரேட் மார்க் அங்கீகாரம் கோரி தோனி விண்ணப்பித்துள்ளார். டிரேட்மார்க் பதிவேட்டுக்கான தளத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் (ஓபிசி) தனியார் லிமிடெட் என்ற நிறுவனம் ஏற்கெனவே கேப்டன் கூல் என்பதற்கான டிரேட்மார்கை பதிவு செய்திருந்தது. இது தோனியிடம் தெரிவிக்கப்பட்டது. தோனி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 4 கட்ட விசாரணைக்குப் பிறகு தோனியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், கேப்டன் கூல் என்பதற்கான டிரேட்மார்க் அங்கீகாரத்தை எம்எஸ் தோனி முறைப்படி அதிகாரபூர்வமாகப் பெற்றுள்ளார். கடந்த ஜூன் 16 அன்று டிரேட்மார்க் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து 120 நாள்களுக்குள் மூன்றாவது தரப்பு சார்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார் டிரேட்மார்க் வழங்கப்படும்.