விளையாட்டு

பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் 27-வது பதக்கத்தை வென்ற முன்னாள் ராணுவ வீரர் ஹொக்காத்தோ

2002-ல் இந்திய ராணுவத்தின் ஹவல்தாராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியபோது கன்னிவெடி வெடித்ததில் அவரது இடது கால் பறிபோனது

ராம் அப்பண்ணசாமி

பாராலிம்பிக்ஸ் எஃப் 57 குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஹொக்காத்தோ ஹொத்தெஸே செமா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான எஃப் 57 குண்டு எறிதலில் இந்திய வீரர் ஹொக்காத்தோ ஹொத்தெஸே செமா கலந்துகொண்டார். 12 வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் 14.65 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துத் வெண்கலப் பதக்கம் வென்றார் ஹொக்காத்தோ செமா.

நாகாலாந்து மாநிலத்தைத் சேர்ந்த ஹொக்காத்தோ செமா, 2002-ல் இந்திய ராணுவத்தின் ஹவல்தாராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியபோது கன்னிவெடி வெடித்ததில் அவரது இடது கால் பறிபோனது. இதற்குப் பிறகு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற செமா தன் 32 வயதில் குண்டு எறிதல் பயிற்சியைத் தொடங்கி, தற்போது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 18-வது இடத்தில் உள்ளது.