விளையாட்டு

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து XI அறிவிப்பு

இங்கிலாந்தில் 3-வது வீரராக ஆலி போப் களமிறங்குகிறார்.

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஹெடிங்லேவில் நாளை தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்தின் விளையாடும் லெவன் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 3-வது வீரராக ஜேக்கப் பெத்தெல் களமிறங்குவாரா ஆலி போப் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆலி போப்பை தேர்வு செய்துள்ளார்கள். இதனால், ஜேக்கப் பெத்தெலுக்கு விளையாடும் லெவனில் இடமில்லை.

வேகப்பந்துவீச்சாளர்களாக பிரைடன் கார்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜாஷ் டங் இருக்கிறார்கள். பந்தை சுழற்ற ஷோயப் பஷீர் காத்திருக்கிறார்.

ஸாக் கிராலே, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங், ஷோயப் பஷீர் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய அணியில் நான்காவது பேட்டராக ஷுப்மன் கில் களமிறங்கப்போவதாகவும் தான் 5-வது பேட்டராக களமிறங்கப்போவதாகவும் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.