இங்கிலாந்து அபார வெற்றி! @englandcricket
விளையாட்டு

2-வது டெஸ்ட்: மே.இ. தீவுகளை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

யோகேஷ் குமார்

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஜூலை 18 அன்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 416 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஆலி போப் 121 ரன்கள் எடுத்தார். அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி கெவிம் ஹாட்ஜின் அசத்தலான பேட்டிங்கால் 457 ரன்கள் குவித்தது. 19 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்தார் ஹாட்ஜ்.

இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக்கின் அதிரடி கூட்டணியால் 425 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

ரூட் 10 பவுண்டரிகளுடன் 122 ரன்களும், புரூக் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்களும் எடுத்தனர். ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு 385 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மே.இ. தீவுகள் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சோயிப் பஷிர் சிறப்பாக பந்துவீசி 5 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.