துலீப் கோப்பை ANI
விளையாட்டு

துலீப் கோப்பை 2024: அணிகள் அறிவிப்பு!

தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

யோகேஷ் குமார்

துலீப் கோப்பையில் பங்கேற்கவுள்ள வீரர்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியான துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5 முதல் 22 வரை நடைபெற உள்ளது.

இதில், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஜெயிஸ்வால், ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர் போன்ற பிரபல வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தம் 4 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் கில், அபிமன்யு ஈஸ்வரன், கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.