ஆஸி. டி20 கேப்டனாக இருந்ததில்லை - பேட் கம்மின்ஸ்
ஆஸி. டி20 கேப்டனாக இருந்ததில்லை - பேட் கம்மின்ஸ் ANI
விளையாட்டு

ஆஸி. டி20 கேப்டனாக இருந்ததில்லை: ஐபிஎல் அனுபவம் பற்றி பேட் கம்மின்ஸ்

யோகேஷ் குமார்

ஐபிஎல் அனுபவம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் சேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாதில் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியை நோக்கி இந்த ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது கேப்டன் பதவி குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“நான் டி20 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியதில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் சற்று வித்தியாசமானவை. இங்கு நிறைய ரன்கள் அடிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கும், ஐபிஎல்-ல் கேப்டனாக செயல்படுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கடந்த ஆட்டத்தை பொறுத்தவரை நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன. ஒரு சில தவறுகள் நடந்திருந்தாலும், எங்கள் அணி கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன். அணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். புவனேஷ்வர் குமார் ஹைதராபாதில் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி உள்ளார். எனவே, சொந்த மண்ணில் இது போன்ற அனுபவம் அணியின் வெற்றிக்கு உதவும்” என்றார்.