கம்மின்ஸ் (இடது), ஹேசில்வுட் (நடுவில்) ANI
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை: கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்!

ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

கிழக்கு நியூஸ்

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலிருந்து ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரும் விலகியுள்ளார்கள்.

பாகிஸ்தான், துபாயில் நடைபெறவுள்ள சாம்பியன் கோப்பை போட்டி பிப்ரவரி 19-ல் தொடங்கவுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸி. அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து விலகியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். இதனால் சாம்பியன்ஸ் கோப்பையில் சரியான வீரர்களைத் தேர்வது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது.

இதையடுத்து ஆஸி. கேப்டன் பதவிக்கு ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

நான்கு வீரர்களுக்குப் பதிலாக ஜேக் பிரேசர் மெக்கர்க், ஷான் அபாட், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா ஆகிய வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸி. அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.