நடைபெறுமா சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம்? ANI
விளையாட்டு

பெங்களூருவில் கனமழை: நடைபெறுமா சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம்?

யோகேஷ் குமார்

கன மழை காரணமாக நாளை நடைபெறவிருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு உட்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் 4-வது அணி யார்? என்பதற்கான மிக முக்கியாமான சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஆனால், தொடர்ந்து பெங்களூருவில் கனமழை பெய்துவரும் நிலையில் நாளைய ஆட்டம் நடைபெறுவது சந்தேகம் என்றே தெரிகிரது.

நடப்பு ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

ஆர்சிபி அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் (இலக்கு 201-ஆக இருந்தால்). அதேபோல 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆர்சிபி விளையாடினால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் 4-வது அணியாக ஆர்சிபி அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சிஎஸ்கே அணி தகுதி பெற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே போதுமானது.

ஒருவேளை இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் ஆர்சிபி அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும். மழையால் கைவிடப்படும் நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் ஆர்சிபி அணி 13 புள்ளிகளை மட்டுமே எடுக்கும். சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் தகுதி பெறும். எனவே நடக்கவிருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக ராஜஸ்தான், கேகேஆர், சன்ரைசர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.