கோப்புப்படம் ANI
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்டில் காயமடைந்த சைம் அயூப் சேர்க்கப்படவில்லை.

கிழக்கு நியூஸ்

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முஹமது ரிஸ்வான் தலைமையிலான அணியில் கடைசியாக 2023-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஸமான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்டில் காயமடைந்த சைம் அயூப் சேர்க்கப்படவில்லை. மோசமான ஃபார்மில் உள்ள அப்துல்லா ஷஃபிக் சேர்க்கப்படவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸம், ஃபகார் ஸமான், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, முஹமது ரிஸ்வான், உஸ்மான் கான், அப்ரார் அஹமது, ஹாரிஸ் ராஃப், முஹமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை பிப்ரவரி 19 அன்று கராச்சியில் எதிர்கொள்கிறது.