ஷாஹித் அஃப்ரிடி ani
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு கோலி வந்தால் இந்தியாவின் அன்பை மறந்துவிடுவார்: ஷாஹித் அஃப்ரிடி

யோகேஷ் குமார்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் இலங்கை அல்லது துபாயில் நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசியலில் இருந்து விளையாட்டை தள்ளிவைக்க வேண்டும் என்று ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

நியூஸ் 24 ஸ்போர்ட்ஸிடம் ஷாஹித் அஃப்ரிடி கூறியதாவது

“நான் இந்திய அணியை வரவேற்கிறேன். அவர்கள் பாகிஸ்தானுக்கு வரவேண்டும். நான் இந்தியாவுக்கு சென்றபோதெல்லாம் எனக்கு அதிகமான அன்பும் மரியாதையும் கிடைத்திருக்கிறது. அதேபோல 2005-ல் இந்திய அணி பாகிஸ்தான் வந்தபோதும் அவர்களுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் கிடைத்தது.

அரசியலில் இருந்து விளையாட்டை தள்ளிவைக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கோலி வந்தால் இந்தியாவின் அன்பை மறந்துவிடுவார். ஏனென்றால், பாகிஸ்தானில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த வீரர் கோலி. இந்தியா பாகிஸ்தானுக்கு வருவதும், பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்வதையும் விட அழகான விஷயம் எதுவும் இருக்க முடியாது” என்றார்.