ஆர்ஜே மெஹ்வாஷுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் யுஸ்வேந்திர சஹல்.
யுஸ்வேந்திர சஹல் - தனஸ்ரீ வெர்மாவுக்கு 2020 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 5 அன்று குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் இணைந்து மனுத் தாக்கல் செய்தார்கள். தங்களுடைய மனுவில் ஜூன் 2022 முதல் இருவரும் பிரிந்து வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருவருக்கும் மும்பை குடும்பநல நீதிமன்றம் கடந்த மாதம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
இதனிடையே, விவாகரத்து பெறுவதற்கு முன்பு கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றை நேரில் காண துபாய் மைதானம் சென்றிருந்தார் யுஸ்வேந்திர சஹல். இவருடன் ஒரு பெண் இருந்தார். அவர் புகழ்பெற்ற ஆர்ஜே மெஹ்வாஷ் என்பது தெரியவந்தது.
கடந்த டிசம்பரில் சஹல் மற்றும் சிலருடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் மெஹ்வாஷ்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டத்தைக் காண மெஹ்வாஷ் முல்லாபூர் மைதானத்துக்குச் சென்று பஞ்சாபுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
மைதானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெஹ்வாஷ், "உங்களுக்காக நாங்கள் அனைவரும் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இதில் யுஸ்வேந்திர சஹலுடன் எடுக்கப்பட்ட படமும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பதிவின் கீழ், "நீங்கள் தான் என் முதுகெலும்பு. எப்போதும் வலிமையுடன் உணர வைப்பதற்கு நன்றி" என்று சஹல் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, மெஹ்வாஷுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் சஹல்