ANI
விளையாட்டு

பிஜிடி 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா XI அறிவிப்பு!

முதல் டெஸ்டில் விளையாடிய 11 வீரர்களில் காயம் காரணமாக ஹேசில்வுட் விலக, அவருக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளார்.

யோகேஷ் குமார்

பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்த் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் நாளை அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இதுவரை 12 பகலிரவு டெஸ்ட்டுகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அதில் 11-ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் விளையாடிய 11 வீரர்களில் காயம் காரணமாக ஹேசில்வுட் விலக, அவருக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றபடி முதல் டெஸ்டில் விளையாடிய பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 2-வது டெஸ்டில் விளையாடவுள்ளனர்.