ANI
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்குப் பரிசுத்தொகை அறிவிப்பு!

கடந்த வருடம் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடியைப் பரிசுத்தொகையாக அறிவித்தது பிசிசிஐ.

கிழக்கு நியூஸ்

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சாதனை படைத்தது. எம்எஸ் தோனிக்குப் பிறகு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 58 கோடியைப் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்தப் பரிசுத்தொகையை வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக்குழுவினர் பகிர்ந்துகொள்வார்கள்.

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணி, ரூ. 19.53 கோடியை ஐசிசியிடமிருந்து பரிசுத்தொகையாகப் பெற்றது. மேலும் க்ரூப், நாக் அவுட் ஆட்டங்களை வென்றதற்கு என மொத்தமாக ரூ. 21.52 கோடியை அப்போட்டியின் மூலம் இந்திய அணி பெற்றது.

கடந்த வருடம் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடியைப் பரிசுத்தொகையாக அறிவித்தது பிசிசிஐ. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியிடமிருந்து ரூ. 20.42 கோடி பரிசுத்தொகையாகக் கிடைத்தது.