பிசிசிஐ வழங்கிய ரூ. 125 கோடி: யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?  ANI
விளையாட்டு

பிசிசிஐ வழங்கிய ரூ. 125 கோடி: யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாத வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடி வழங்கப்படும்.

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றதைத் தொடர்ந்து ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த பரிசுத் தொகையில் அணியில் உள்ளவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற விவரத்தை பார்ப்போம்.

சஞ்சு சாம்சன், சஹால், ஜெயிஸ்வால் (ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாதவர்கள்) உட்பட அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடி.

தலைமை பயிற்சியாளர் - டிராவிட் - ரூ. 5 கோடி

பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் - விக்ரம் ராத்தோர், பராஸ் மாம்ப்ரே, திலிப் ஆகியோருக்கு தலா ரூ. 2.5 கோடி

தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உட்பட தேர்வுக் குழுவில் இடம்பெற்ற 5 நபர்களுக்கு தலா ரூ. 1 கோடி

உடற்பயிற்சி உதவியாளர்கள், த்ரோடவுன் உதவியாளர்கள் உட்பட 10 நபர்களுக்கு தலா ரூ. 2 கோடி

ரிசர்வ் வீரர்கள் (ரிங்கு சிங், கில், கலீல் அஹமது, அவேஷ் கான்) - தலா ரூ. 1 கோடி