பிசிசிஐ
பிசிசிஐ ANI
விளையாட்டு

2011-ல் ரூ. 39 கோடி, 2024-ல் ரூ. 125 கோடி: பரிசுத் தொகையைப் பல மடங்கு உயர்த்திய பிசிசிஐ!

யோகேஷ் குமார்

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இது 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

2011-ல் தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற போது வீரர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், அணியின் தேர்வாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் வழங்கப்பட்டது. ஏறத்தாழ இந்திய அணிக்கு ரூ. 39 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2011-ல் வழங்கியதை விட 3.2 மடங்கு அதிகமாக பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.