பாபர் ஆஸம் ANI
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: பாபர் ஆஸம் நீக்கம்?

கடைசியாக விளையாடிய 18 டெஸ்ட் இன்னிங்ஸில் பாபர் ஆஸம் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

யோகேஷ் குமார்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து பாபர் ஆஸம் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்தும், இன்னிங்ஸ் தோல்வி கண்ட முதல் அணி எனும் மோசமான சாதனையை படைத்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் இந்த தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் முன்னாள் வீரரான ஆகிப் ஜாவெத், அஸார் அலி, பிரபல நடுவர் அலீம் தார் ஆகியோர் இணைந்தனர். இதனால் பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து பாபர் ஆஸம் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாக விளையாடிய 18 டெஸ்ட் இன்னிங்ஸில் பாபர் ஆஸம் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 2023 முதல் அவர் விளையாடிய 9 டெஸ்டுகளில், அவரது சராசரி 21-க்கும் குறைவாக உள்ளது.

பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம், சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் 2-வது டெஸ்டில் இருந்து பாபர் ஆஸம் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.