இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20யில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மீண்டும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தொடக்கத்தில் கொஞ்சம் உதவி இருந்தது. ஜோஷ் ஹேசில்வுட் இருக்கும்போது சொல்ல வேண்டுமா என்ன...? ஆடுகளத்திலிருந்த உதவியைப் பயன்படுத்தி டெஸ்ட் மேட்ச் லெந்தில் பந்துவீசி இந்திய பேட்டர்களை திணறடித்தார். அபிஷேக் சர்மாவுக்கு மட்டும் இது எடுபடவில்லை.
மற்ற பேட்டர்கள் அனைவரும் வந்ததும் போனதுமாக இருந்தார்கள். 49 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. 6-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் இணைந்தார் ஹர்ஷித் ராணா.
அபிஷேக் சர்மா அதிரடி காட்ட ஹர்ஷித் ராணா விக்கெட்டை பாதுகாத்து கூட்டணி அமைத்தார். அபிஷேக் சர்மா 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்திய அணி 15-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. 6-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த பிறகு, ராணா 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராணா விக்கெட்டுக்கு பிறகு ஷிவம் துபே 4 ரன்களுக்கு அதே ஓவரில் ஆட்டமிழந்தார். பின்வரிசை பேட்டர்களும் உதவவில்லை. அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 20 ஓவர்களுக்கு முழுமையாக பேட் செய்யாத இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அபிஷேக் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா தவிர்த்து வேறு யாரும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுக்கவில்லை. ஹேசில்வுட் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரே இறுதியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கம் தந்து ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். 4.1 ஓவரிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எடுத்தது.
ஹெட் முதல் விக்கெட்டாக 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவை நொறுக்கித் தள்ளிய மிட்செல் மார்ஷ் அவருடைய பந்திலேயே 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரை சதத்தைத் தவறவிட்டார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், கட்டுப்படுத்துவதற்குப் போதிய ரன்கள் இல்லை.
13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. மூன்றாவது டி20 ஹோபார்டில் நவம்பர் 2 அன்று நடைபெறுகிறது.
Australia posted a commanding victory over India in the second T20I at the Melbourne Cricket Ground on Friday as the visitors failed to perform with the bat except for a swashbuckling 68 from Abhishek Sharma and a useful 35 from Harshit Rana.
IND v AUS | India v Australia | Melbourne T20 | Mitchell Marsh | Suryakumar Yadav | Josh Hazlewood | Harshit Rana | Abhishek Sharma |