@icc
விளையாட்டு

இங்கிலாந்திடம் மீண்டும் தடுமாறும் நியூசிலாந்து!

நியூசிலாந்து ஏதாவது சாகசம் செய்து தோல்வியிலிருந்து தப்புமா?

யோகேஷ் குமார்

இந்தியாவில் அட்டகாசமாக விளையாடிய நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராகத் தடுமாறி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, வெலிங்டனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டையும் வென்று தொடரை வெல்லும் நிலைமையில் உள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 ரன்ரேட்டுடன் 280 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் 115 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்தார். ஆலி போப் 66 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் நேதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும் வில் ஓ ரோர்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பிறகு நியூசிலாந்து அணியை 125 ரன்களுக்குச் சுருண்டது. வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தார். அட்கின்சன் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்ஸிலும் வேகமாக ரன்கள் எடுக்கும் இங்கிலாந்து 2-வது நாள் முடிவில், 76 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 92, ஜகோப் பெதெல் 96 ரன்களும் எடுத்தார்கள். 533 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ளது இங்கிலாந்து.

நியூசிலாந்து ஏதாவது சாகசம் செய்து தோல்வியிலிருந்து தப்புமா?