ஆசியக் கோப்பை 2025 போட்டி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி20 ஆட்டங்கள் கொண்ட இப்போட்டி செப்டம்பர் 9 - 28 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மே மாத ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளும் ஒரு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதால் ஆசியக் கோப்பைக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2023-ல் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.