இந்தியாவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பை! ANI
விளையாட்டு

இந்தியாவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பை!

2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

யோகேஷ் குமார்

2025 ஆடவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கோப்பை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் (இந்தியா விளையாடிய ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்றது.

இந்நிலையில் 2025 ஆடவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 1990-1991 ஆசியக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இதன் மூலம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஆசியக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

டி20 வடிவில் இப்போட்டி நடக்கவுள்ளதாக ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027 ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவில் வங்கதேசத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.