@anayabangar
விளையாட்டு

பெண்ணாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்!

ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம்...

யோகேஷ் குமார்

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொண்டார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் 12 டெஸ்டுகளிலும், 15 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடினார்.

இந்நிலையில், சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆனால், அது சஞ்சய் பங்கரின் மகன் என பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது. ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டார்.