மாண்டோ டுபிளான்டிஸ் @mondo_duplantis
விளையாட்டு

10-வது முறையாக உலக சாதனையை முறியடித்த போல் வால்ட் வீரர்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மாண்டோ டுபிளான்டிஸ் 6.25 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்திருந்தார்.

யோகேஷ் குமார்

டைமண்ட் லீகில் 6.26 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார் மாண்டோ டுபிளான்டிஸ்.

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் போல் வால்டில் ஸ்வீடன் வீரர் மாண்டோ டுபிளான்டிஸ் 6.26 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 6.25 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் 6.26 மீ. உயரம் தாண்டி தனது முந்தைய சாதனையை முறியடித்து மாண்டோ டுபிளான்டிஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த வாரம் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீகில் 6.15 மீ. உயரம் தாண்டி டுபிளான்டிஸ் வெற்றி பெற்றிருந்தார்.

ஏற்கெனவே 9 முறை முந்தைய சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்த இவர், தற்போது 10-வது முறையாக உலக சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரலில் சீனாவில் நடைபெற்ற டைமண்ட் லீகில் 6.24 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்தார்.

இதன் மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை உலக சாதனையை முறியடித்துள்ளார்.