ஜோஃப்ரா ஆர்ச்சர் ANI
விளையாட்டு

ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்டுள்ள புது சிக்கல்?

ஏலத்தில் தேர்வான பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மறுத்தால் அடுத்த ஐபிஎல் மினி ஏலங்களில் ஆர்ச்சரால் பங்கேற்க முடியாது.

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 12.5 கோடிக்கு ஆர்ச்சரைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கடந்த பிப்ரவரி 2021 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்ச்சர் விளையாடவில்லை. எனினும் இந்த வருடம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் அடுத்த வருடம் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஷஸ் தொடர் என இரண்டிலும் ஆர்ச்சர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றால் ஏப்ரல், மே-யில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆர்ச்சர் விளையாடி உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். தற்போது ஐபிஎல் ஏலத்தில் ஆர்ச்சர் தேர்வாகியுள்ளதால் அடுத்த ஏப்ரல், மே-யில் ஐபிஎல்-லில் தான் ஆர்ச்சர் விளையாடுவார். ஏலத்தில் தேர்வான பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மறுத்தால் அடுத்த ஐபிஎல் மினி ஏலங்களில் ஆர்ச்சரால் பங்கேற்க முடியாது.

இதையடுத்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் முடிவை ஆர்ச்சர் எடுத்துள்ளதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுவது மேலும் தாமதமாகும் என இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராபர்ட் கீ தெரிவித்துள்ளார்.