அமன் ஷெராவத் 
விளையாட்டு

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பதவி உயர்வு!

ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற இளம் வீரர் எனும் பெருமையைப் பெற்றார் அமன் ஷெராவத்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத்துக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஒரே ஒரு பதக்கம் கிடைத்தது. இதை வென்ற 21 வயதான அமன் ஷெராவத் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற இளம் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு வடக்கு ரயில்வே மண்டலத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் 3பி ரைஃபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு இந்திய ரயில்வேயின் சிறப்புப் பணி அதிகாரியாக இரட்டைப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.