இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஏற்கெனவே முதலிரு டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக இந்திய அணியில் பும்ரா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார். வாஷிங்டன் சுந்தருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடரை வென்ற நியூசிலாந்து அணியில் சாண்டனர், செளதிக்குப் பதிலாக மேட் ஹென்றி, இஷ் சோதி இடம்பெற்றுள்ளார்கள்.