1036 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம்.
வரும் 7 ஜனவரி 2025-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிடவுள்ளது மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்.
இந்த அறிவிக்கையின் கீழ் பல்வேறு பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர்கள், அறிவியல் மேற்பார்வையாளர் (பணிச்சூழலியல் மற்றும் பயிற்சி), பல்வேறு பாடங்களுக்கான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், அரசு வழக்கறிஞர், உடற்கல்வி ஆசிரியர் (ஆங்கில வழிக் கல்வி), அறிவியல் உதவியாளர் (பயிற்சி) ஆகிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கும்
இளநிலை மொழிபெயர்ப்பாளர் (ஹிந்தி), நூலகர், ஆய்வக உதவியாளர் (பள்ளி), ஆய்வக உதவியாளர் தரம்-III (வேதியலாளர் மற்றும் உலோகவியலாளர்), பல்வேறு பாடங்களுக்கான தொடக்க கல்வி ரயில்வே ஆசிரியர், உதவி ஆசிரியர் (பெண்), பணியாளர் நலன் ஆய்வாளர், மூத்த செய்தித்தொடர்பு ஆய்வாளர், இசை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.
மொத்தம் 1036 காலிப் பணியிடங்களுக்கான இந்த அறிவிக்கையின் கீழ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய 2025 பிப்ரவரி 6 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.