வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கிப் பணியில் சேர விருப்பமா?: வெளியான புதிய அறிவிப்பு!

10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு கிடையாது.

ராம் அப்பண்ணசாமி

எஸ்பிஐ வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் உள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் (JUNIOR ASSOCIATES - CUSTOMER SUPPORT & SALES) பதவியில் உள்ள 13,735 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் 336 மற்றும் புதுச்சேரியில் 4 என, மொத்தம் 340 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 2025 ஜனவரி 7 கடைசி தேதியாகும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும் (2.4.1996-க்கு முன்பும், 1.4.2004-க்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பிற பிரிவினர் அனைவரும் ரூ. 750 செலுத்தவேண்டும்.

தேர்வுகள்: 100 மதிப்பெண்கள் கொண்ட முதல்நிலைத் தேர்வு, 200 மதிப்பெண்கள் கொண்ட முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ் மொழி தகுதித் தேர்வு: 10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு தகுதித் தேர்வு கிடையாது. பிறர், தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைவது கட்டாயம்.

சம்பளம்: மாதம் ரூ. 24,050 - ரூ. 64,480 வழங்கப்படும்.

விவரங்களுக்கு: https://bank.sbi/web/careers/current-openings